sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சமூக வலைதளங்களில் பரவும் வெடிகுண்டு மிரட்டல் புரளி: மத்திய அரசு எச்சரிக்கை

/

சமூக வலைதளங்களில் பரவும் வெடிகுண்டு மிரட்டல் புரளி: மத்திய அரசு எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பரவும் வெடிகுண்டு மிரட்டல் புரளி: மத்திய அரசு எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பரவும் வெடிகுண்டு மிரட்டல் புரளி: மத்திய அரசு எச்சரிக்கை

1


UPDATED : அக் 26, 2024 08:52 PM

ADDED : அக் 26, 2024 08:46 PM

Google News

UPDATED : அக் 26, 2024 08:52 PM ADDED : அக் 26, 2024 08:46 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் புரளிகளை சமூக வலைதளங்கள் தடுக்க வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்,'' என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், சமூக வலைதள நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமான பயணிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இத்தகைய மிரட்டல்கள், ஏராளமானவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதார பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

சமூக ஊடக தளங்களில் ' பார்வர்டு, ஷேரீங், ரீபோஸ்ட், ரீ டுவிட் ' செய்வதால், மிரட்டல் செய்தி அதிகளவு பரவுகிறது. இது போன்ற மிரட்டல்கள் பெரும்பாலானவை தவறான தகவல்கள் ஆகும். அவை சட்டம் ஒழுங்கு, விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் விமான பயணிகளின் பாதுகாப்பை பெருமளவு சீர்குலைக்கும்.

சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் தவறான தகவல்களை, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நீக்க வேண்டியது சமூக ஊடகங்களின் கடமை. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் தவறான கருத்துகளை பரவுவதை தடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை.

பயனர்களால் வழங்கப்படும் மூன்றாம் தரப்பு தகவல், தரவு ஆகியவற்றிற்கான பொறுப்புக்கு சமூக வலைதளங்களுக்கு ஐடி சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உரிய விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படாது. மேலும், அந்த நிறுவனங்கள் மீது ஐடி சட்டம் மற்றும் ஐ.பி.சி.,க்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட பாரதீய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற தகவல்கள்பரவுவதை தடுப்பதுடன், அதனை நீக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு செயலையும் தங்களது தலங்களில் உணர்ந்தால், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் மத்திய அரசு கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us