ADDED : மே 09, 2025 09:24 PM
புதுடில்லி:அருண் ஜெட்லி மைதானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில், புரளி என போலீசார் அறிவித்தனர்.
டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கு நேற்று காலை வந்த இ - மெயிலில், அருண் ஜெட்லி மைதானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
தகவல் அறிந்து, வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்ப நாய் படை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
மைதானம் மற்றும் கட்டடங்களில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இரண்டு மணி நேர சோதனைக்குப் பின், வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
அருண் ஜெட்லி மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் இ - மெயில் அனுப்பியவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலையில், வெடிகுண்டு வைத்திருப்பதாக இ - மெயில் வந்ததால், போலீசாரிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
