தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : அக் 29, 2024 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பதி,ஆந்திராவின் திருப்பதியில் உள்ள நான்கு சொகுசு ஹோட்டல்களுக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

போலீசார் நடத்திய சோதனைக்குபின், அது வதந்தி என தெரியவந்தது.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு, இ - மெயில் வாயிலாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதில், 'நாங்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ர்ந்தவர்கள்; குண்டை வெடிக்க செய்து, கோவிலை தகர்ப்போம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இஸ்கான் கோவில் நிர்வாகம், போலீசுக்கு தகவல் அளித்தது.

அங்கு, வெடிகுண்டு செயல்இழப்பு குழுவினருடன் கோவில் வளாகம் முழுதும் போலீசார் சோதனையிட்டனர்.

இதில், வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us