விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: விரைவில் தீர்வு காண மத்திய அமைச்சர் உறுதி!
விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: விரைவில் தீர்வு காண மத்திய அமைச்சர் உறுதி!
ADDED : அக் 20, 2024 09:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாரணாசி: விமான போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையிலான அச்சுறுத்தல் புரளிகளுக்கு, விரைவில் தீர்வு காண்போம். என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரபிரதேச மாநிலம் வந்தார். அவர் வாரணாசியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. மிரட்டல் அழைப்புகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம். உளவுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை மூலம் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் எல்லா முக்கிய நபர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்போம். விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண்போம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.