ADDED : ஏப் 16, 2025 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தி : உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைத்து, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோவிலை, ராம ஜென்மபூமி டிரஸ்ட் என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், ராமர் கோவில் நிர்வாகத்தின் இ - மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்தார். இதில், ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக குறிப்பிடப்பட்டு இருப்பதை பார்த்து, கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

