sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் அடுத்தடுத்து 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

டில்லியில் அடுத்தடுத்து 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டில்லியில் அடுத்தடுத்து 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டில்லியில் அடுத்தடுத்து 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : மார் 10, 2026 05:02 PM

Google News

ADDED : மார் 10, 2026 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

டில்லி அருகே உள்ள குருகிராமில், 12 தனியார் பள்ளிகளுக்கு, இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட போலீஸ் குழு நடத்திய சோதனையில், அது வெறும் புரளி என அறிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இ - மெயில் முகவரியில் இருந்து டில்லி, ஹரியானா, பஞ்சாப், மாநிலங்கள் மற்றும் சண்டிகர் நகர பள்ளிகளுக்கு, வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்கள் வந்தன.

அதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுவினர் நடத்திய சோதனையில், அவர்களுக்கு வந்த தகவல் புரளி என தெரிந்தது. அது போல இன்றும், குருகிராம் பகுதியில் உள்ள 12 பள்ளிகளுக்கு ஒரே சமயத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் குழுவினர், சல்லடை போட்டு தேடியும், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.இதையடுத்து, 'அந்த பள்ளிகளில் வெடிகுண்டுகள் எதுவும் வைக்கப்படவில்லை; குழப்பம் ஏற்படுத்துவதற்காக வந்தன இ - மெயில் தகவல்கள்' என அறிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us