டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக வெளியேற்றப்பட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள்
டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக வெளியேற்றப்பட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள்
ADDED : செப் 13, 2025 05:43 AM

புதுடில்லி : டில்லி மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்ற வளாகத் தை விட்டு வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இ - மெயில் டில்லி மற்றும் மும்பையில் உள்ள உயர் நீதிமன்றங்கள் நேற்று வழக்கம்போல் காலை இயங்க துவங்கின. முன்னதாக, அந்த நீதிமன்றங்களின் இ - மெயில் முகவரிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
டில்லி உயர் நீதிமன்றத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில், 'நீதிமன்றத்தின் மூன்று இடங்களில் சக்திவாய்ந்த வெடி குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.
'ஏற் கனவே விடுக்கப்பட்ட பொய்யான மிரட்டல்கள் போல் இது இருக்காது; டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்படும் மு ஸ்லிம்களின் பிற் பகல் தொழுகைக்குபின் அவை வெடித்து சிதறும்' என, குறிப் பிடப்ப ட்டிருந்தது.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு இடையே நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகளிடம் இந்த தகவலை தெரிவித்தனர். இதைஅடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணைகளை உடனே ஒத்திவைத்ததுடன், நீதிமன்ற வளாகத்தை விட்டு அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டனர்.
இதை த்தொடர்ந்து, நீதிமன்ற வளாகங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் உட்பட அனைவரும் வெளியேற்றப் பட்டனர்.
சோதனை இதற்கிடையே போலீசார், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் டில்லி மற்றும் மும்பை உயர் நீதிமன்ற வளாகங்களில் சோதனையிட்டனர்.
நீண்டநேர சோதனைக்குபின் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகங்கள் பிற்பகலுக்கு பின் மீண்டும் இயங்கின.