ADDED : அக் 28, 2024 12:25 AM

புதுடில்லி: நேற்று ஒரே நாளில் மட்டும், 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், இந்த மிரட்டல்கள் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற மிரட்டல்களால் விமான நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதுடன், பயணியருக்கும் கால தாமதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த, 14 நாட்களில், 350க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெரும்பாலும் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றும் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகாசா நிறுவனத்தின் 15 விமானங்கள், இண்டிகோவின் 18; விஸ்தாராவின் 17 என மொத்தம் 50 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த விமானங்கள் அனைத்தும், முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் இயக்கப்பட்டன.