ADDED : செப் 02, 2025 12:24 AM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை, நம் ராணுவத்தினர் விரட்டி அடித்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் செக்டார் என்ற பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக, நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதை பார்த்த நம் ராணுவத்தினர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. நம் ராணுவத்தினரின் தாக்குதலை சமாளிக்க முடியாத பயங்கரவாதிகள், வந்த வழியை பார்த்து தப்பி ஓடினர். இதையடுத்து, அந்த பகுதியில் ராணுவத்தினர் அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மழை, வெள்ளப் பாதிப்பை நேரில் பார்வையிட பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கு சென்றுள்ள நிலையில், பயங்கரவாதிகளின் ஊடுருவலை ராணுவத்தினர் முறியடித்துள்ளனர்.