ஏழை குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடியால் மட்டுமே நல்லது செய்ய முடியும்: அமித்ஷா
ஏழை குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடியால் மட்டுமே நல்லது செய்ய முடியும்: அமித்ஷா
ADDED : மே 02, 2024 04:47 PM

பரேலி: ''ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த பிரதமர் மோடி என்ற ஒருவரால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த பிரதமர் மோடி என்ற ஒருவரால் மட்டுமே பரேலி மக்களுக்கு நல்லது செய்ய முடியும். சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியின்போது உத்தரபிரதேசம் நாட்டுத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களின் தொழிற்சாலைகளாக இருந்தது. ஆனால் இப்போது பாகிஸ்தானில் குண்டு வீசும் ஏவுகணை தொழிற்சாலையாக மாறியுள்ளது.
பா.ஜ., ஆட்சியில் வாகன தொழிற்சாலைகள் நிறுவப்படுகின்றன. காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி புனரமைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம் உ.பி.,யில் கட்டப்படுகிறது. இந்த தேர்தல் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்கும் தேர்தல். காஷ்மீர் முதல் கேரளா வரை பயங்கரவாதத்தை அழிக்கும் தேர்தல்; சத்தீஸ்கர் முதல் ஜார்க்கண்ட் வரை நக்சலைட்களை அழிக்கும் தேர்தல்; உ.பி.,யில் குண்டர்கள், மாபியாக்களை ஒழிக்கும் தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.

