தெலுங்கானா டி.எஸ்.பி.,யான குத்துச்சண்டை வீராங்கனை
தெலுங்கானா டி.எஸ்.பி.,யான குத்துச்சண்டை வீராங்கனை
ADDED : செப் 20, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: தெலுங்கானாவின் நிஜாமாபாதைச் சேர்ந்தவர் நிஹாத் ஜரீன், 28. பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான இவர், இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் நிஹாத் ஜரீன் பங்கேற்றார்.
இந்நிலையில், தெலுங்கானா அரசு இவருக்கு சிறப்பு டி.எஸ்.பி., அந்தஸ்துடன் கூடிய பணி வழங்கி கவுரவித்துள்ளது.
இதைஅடுத்து, மாநில டி.ஜி.பி., ஜிதேந்தரை சந்தித்த நிஹாத் ஜரீன் நேற்று பணியில் இணைந்தார்.