ஆசிட் குடித்த இளம்பெண் பலாத்காரம் செய்த காதலன் கைது
ஆசிட் குடித்த இளம்பெண் பலாத்காரம் செய்த காதலன் கைது
ADDED : ஜூலை 02, 2025 10:01 PM
புதுடில்லி:காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அந்தப் பெண்ணின் காதலனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரங்புரி பஹாரி, சங்கர் முகாமில் வசிப்பவர் ரெஹான். பிளஸ் 2 படித்துள்ள இவர், விமான நிலையத்தில் சுமை ஏற்றும் பணியாளராக இருந்தார். தற்போது வேலையில்லாமல் இருக்கிறார். இவர், தென்மேற்கு டில்லி வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்தார்.
சமீபத்தில் இருவரும் தனிமையான இடத்தில் சந்தித்தபோது, ரெஹான், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின், திருமணம் குறித்து அந்தப் பெண் பேசியபோது, இருவரும் நெருக்கமாக இருந்த படங்களைக் காட்டி மிரட்டினார்.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண், ஜூன் 18ம் தேதி ஆசிட்டை குடித்தார். சற்று நேரத்தில் வலியால் அலறினார். பக்கத்து வீட்டுக்காரர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஜூன் 20ம் தேதி உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால், சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இளம்பெண்ணின் தாய் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ரெஹனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.