உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 26, 2026 02:12 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: பூங்காவில், 17 வயது சிறுவன் உடல் கண்டெடுக்கப்பட்டது .
வடகிழக்கு டில்லி நியூ உஸ்மான்பூர் டில்லி மேம்பாட்டு ஆணைய பூங்காவில் நேற்று அதிகாலை, சிறுவன் உடல் கிடந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், அதே பகுதியில் வசித்த ஜைத்,17, என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சம்பட இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தனிப்படையினர் கொலையாளிகள் குறித்து விசாரிக்கின்றனர்.
