ADDED : ஜன 14, 2024 11:21 PM
மாண்டியா: மனநலம் பாதிக்கப்பட்ட பெண், கற்பழித்து கொல்லப்பட்ட, கொடூரம் நடந்து உள்ளது.
மாண்டியா நாகமங்களா பெல்லுார் அருகே, திருமால்பூர் கிராமத்தில் வசித்தவர் 29 வயது பெண். மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர் பராமரித்து வந்தனர். கடந்த 9ம் தேதி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை தேடினர். அவர் கிடைக்கவில்லை. அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. மகள் மாயமானதாக, நாகமங்களா போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு - மங்களூரு, தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் அருகே உள்ள நிலத்தில், பெண் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மாண்டியா எஸ்.பி., யத்தீஷ், நாகமங்களா போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண், மாயமானதாக தேடப்பட்ட பெண் என்பதும், அவரை மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்ததும் தெரிந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட, மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.