ADDED : ஜன 14, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துமகூரு: காரனஹள்ளி கிராமத்தில், கொட்டகையில் தீ பிடித்ததில், ஒன்பது பசுக்கள், 20 ஆடுகள் உயிரிழந்தன.
துமகூரின், காரனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் சிக்கண்ணா என்பவர், ஆடுகள், பசுக்கள் வளர்க்கிறார். வீட்டு முன்பாக கொட்டகை கட்டி, ஆடு, மாடுகளை வைத்திருந்தார். நேற்று அதிகாலை கொட்டகையில், எதிர்பாராமல் தீ பிடித்தது.
தீ பரவியதில், ஒன்பது பசுக்கள், 20 ஆடுகள் தீயில் எரிந்து கருகின. அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் ஐந்து மாடுகள் காப்பாற்றப்பட்டன.
கொட்டகையில் இருந்த விவசாய சாதனங்கள், பாக்கு மூடைகள், ஒரு டிராக்டரும் திக்கிரையாகின. இந்த விபத்தால், சிக்கண்ணாவுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.