பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு
பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு
ADDED : செப் 28, 2024 02:56 AM

புதுடில்லி: அக்னி வீரர்களுக்கான வேலை வாயப்பில் இட ஒதுக்கீட்டு முறையை பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.
ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் குறுகிய காலம் சேவையாற்றும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுடைய இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம்.
இவர்களுக்கு பிற துறைகளில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும், ரஷ்யாவின் ராணுவ தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை துவக்கி ஏவுகணைகளை வடிவமைத்து வருகிறது.
இந்நிறுவனம் அக்னி வீரர்களுக்கு வேலைவாயப்புகளில் இட ஒதுக்கீட்டை அறிவித்தது, இதன் படி பாதுகாப்பு மற்றும் நிர்வாகப்பிரிவுகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடும், தொழில்நுட்ப பிரிவில் 15 சதவீதம் இட ஒதுக்கீட்டு முறையை அறிவித்துள்ளது.