ரூ.10.96 கோடி போதைப்பொருள் கடத்தல்; மும்பையில் சிக்கினார் பிரேசில் பெண்!
ரூ.10.96 கோடி போதைப்பொருள் கடத்தல்; மும்பையில் சிக்கினார் பிரேசில் பெண்!
ADDED : மார் 02, 2025 02:29 PM

மும்பை: மும்பையில் ரூ.10.96 கோடி மதிப்புள்ள 1,096 கிராம் கோகைன் அடங்கிய 100 காப்ஸ்யூல்களை கடத்திய பிரேசில் பெண் கைது செய்யப்பட்டார்.
பிரேசில் நாட்டவர் ஒருவர் இந்தியாவிற்குள் போதைப்பொருட்களை கடத்த முயற்சிப்பதாக, டி.ஆர்.ஐ., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சாவ் பாலோவிலிருந்து மும்பைக்கு வந்த பெண் பயணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர் இந்தியாவிற்கு போதைப்பொருட்களை கடத்துவதற்காக, கோகைன் அடங்கிய 100 காப்ஸ்யூல்களை உட்கொண்டதாக ஒபபுக்கொண்டார். பின்னர் அவர் அருகில் உள்ள அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் இருந்து, 1,096 கிராம் கோகைன் அடங்கிய 100 காப்ஸ்யூல்கள் மருத்துவமனையில் மீட்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.10.96 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிரேசில் பெண்ணை கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கும், வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடந்து வருகிறது.