sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முருங்கை இலையில் ரொட்டி!

/

முருங்கை இலையில் ரொட்டி!

முருங்கை இலையில் ரொட்டி!

முருங்கை இலையில் ரொட்டி!


ADDED : நவ 15, 2024 11:12 PM

Google News

ADDED : நவ 15, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருங்கை இலையை நம் உணவுடன் சேர்க்கும்போது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

முருங்கை இலைச் சாறுடன் பால் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், ரத்தம் சுத்திகரித்து, எலும்பையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணியருக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் உள்ளது. தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பதும், ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாச பிரச்னைகளையும் குணப்படுத்தும்.

கர்நாடகாவில் பாரம்பரிய உணவுகளில் ரொட்டியும் ஒன்று. இந்த ரொட்டியை காலை, இரவு உணவாக சாப்பிடுகின்றனர். இதற்கு தொட்டுக் கொள்ள, வட மாவட்டங்கள் பாணியில் சட்னி, ஒரு கிண்ணம் கெட்டியான தயிர் அல்லது ஆந்திர ஸ்டைலில் மாம்பழ பச்சடி, பாகற்காய் பச்சடி போன்றவை பொருத்தமானதாக இருக்கும். அல்லது தக்காளி, வெங்காய சாம்பார், புதினா பச்சடி செய்யலாம்.

இத்தனை நல்ல குணங்கள் கொண்ட முருங்கை இலையில் குழந்தைகளுக்கு பிடித்தமான ரொட்டி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்


l ஒரு கட்டு முருங்கை இலை

l ஒரு கேரட்

l ஒரு பெரிய வெங்காயம்

l 2 கப் துருவிய தேங்காய்

l 2 கப் அரிசி மாவு

l அரை கப் கேழ்வகு மாவு

l 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் துாள்

l 2 டீஸ்பூன் சீரகம்

l 2 டீஸ்பூன் வெள்ளை எள்

l தேவையான அளவு உப்பு

l தேவையான கடலை எண்ணெய்

l ஒரு கப் தண்ணீர்

l மாவை பிசைய சூடான தண்ணீர்

l ரொட்டியை தட்டுவதற்கு ஒரு வாழை இலை

எப்படி செய்வது?


l ஒரு வாளியில் தண்ணீர் ஊற்றி, முருங்கை இலையை நன்றாக கழுவி, உலர வைக்கவும்

l உலர வைத்த இலைகளை ஆய்ந்து கொள்ளவும்

l மஞ்சள் நிற முதிர்ந்த இலைகளை அகற்றிவிடவும்

l உதிர்ந்த முருங்கை இலைகளை, நல்ல தண்ணீரில் வேக வைக்கவும்.

l நன்றாக வெந்த பின், மற்றொரு பாத்திரத்தில் அதை மாற்றி, தேங்காய் துருவல், கேரட் சேர்த்து நன்றாக பிசையவும்.

l அரிசி மாவில் தண்ணீர் விட்டு பிசையவும்.

l இத்துடன் கேரட் கலவையை சேர்த்து சிறிய உருண்டையாக உருட்டி கொள்ளவும். காய்ந்து போகாமல் இருப்பதற்காக, அதன் மீது வெதுவெதுப்பான தண்ணீரை தெளித்து கொள்ளுங்கள்.

l இந்த மாவு உருண்டையை எடுத்து, உள்ளங்கையில் வைத்து தேவையான அளவில் மெல்லியதாக தட்டி கொள்ளவும். அதில் நடுவில் விரலால் துளையிடவும் (உளுந்த வடை போன்று)

l பின்னர், தோசைக்கல்லில் தட்டப்பட்ட ரொட்டியை போடவும். அதன் மீது எண்ணெய் ஊற்றவும்.

l மிதமான தீயில் மூடி வைத்து சமைக்கவும்; 3 - 4 நிமிடங்களுக்கு பின் புரட்டவும்; கீழ் பக்கம் பொன்னிறமாக மாறியிருக்க வேண்டும். பின் ரொட்டியை திருப்பி போட்டு, மீண்டும் மூடி வைத்து, ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

l ரொட்டி வேகும்போது, அடுத்த ரொடடியை தட்டி, தயாராக வைக்கவும். அடுத்த ரொட்டியை செய்வதற்கு முன்பு, அடுப்பின் வெப்பத்தை சிம்மில் வைக்கவும்.

l ரொட்டி மிருதுவாக இருக்க வேண்டுமானால், மாவு பிசைவதில் நல்ல பக்குவமாக இருக்க வேண்டும்.

l ரொட்டியை சட்னி அல்லது நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.






      Dinamalar
      Follow us