பெண் டாக்டர் குடும்பத்துக்கு லஞ்சமா: 'அவமானப்படுத்தும் முயற்சி' என்கிறார் மம்தா
பெண் டாக்டர் குடும்பத்துக்கு லஞ்சமா: 'அவமானப்படுத்தும் முயற்சி' என்கிறார் மம்தா
ADDED : செப் 09, 2024 04:51 PM

கோல்கட்டா: பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் டாக்டரின் குடும்பத்திற்கு கோல்கட்டா போலீசார் பணம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
பெண் டாக்டரின் பெற்றோர் கூறுகையில், ஆரம்பம் முதலே போலீசார் வழக்கை சரியாக கையாளவில்லை. மகளின் உடலை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. பிறகு எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது, போலீஸ் உயர் அதிகாரி மூலம் எங்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தனர் என குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்த மம்தா கூறுகையில், அவர்களுக்கு போலீசார் மூலம் பணம் கொடுக்க முயற்சி ஏதும் செய்யவில்லை. இது மே.வங்கத்தை அவமானப்படுத்த நடக்கும் முயற்சி ஆகும். பணம் கொடுத்து ஒருவரின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. மகளின் நினைவாக அவர்கள் ஏதும் செய்ய விரும்பினால், அவர்கள் எங்களை நாடலாம். அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
சம்பவம் நடந்ததும் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், துர்கா பூஜை காரணமாக சட்டம் ஒழுங்கு பற்றி நன்கு தெரிந்த ஒருவர் பதவியில் இருந்தால் அது நன்றாக இருக்கும் எனக்கருதி அதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.