ADDED : ஜன 22, 2024 06:23 AM
ஷிவமொகா; திருமணத்துக்கு சில நாட்கள் உள்ள நிலையில், மணப்பெண்தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், கட்டேஹக்லு கிராமத்தில் வசித்தவர் சைத்ரா, 26. எம்.காம்., பட்டதாரியான இவர், கட்டேஹக்லுவில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணியாற்றினார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, வரன் பார்த்தனர்.
இதற்கு சைத்ரா எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு உடல் ஆரோக்கிய பிரச்னை உள்ளது. திருமணம் வேண்டாம் என, கூறினார். இதை பொருட்படுத்தாத பெற்றோர், மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்தனர்.
பிப்ரவரி 4ல், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. அழைப்பிதழ் கொடுப்பது, சாஸ்திர, சடங்குகளில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம், குளியலறைக்கு சென்ற சைத்ரா, நீண்ட நேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டினர். திறக்காததால் உடைத்து பார்த்த போது, சைத்ரா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தீர்த்தஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.