தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/திருமண விழா கொண்டாட்டத்தில் குண்டு பாய்ந்து மணமகன் சகோதரி பலி

திருமண விழா கொண்டாட்டத்தில் குண்டு பாய்ந்து மணமகன் சகோதரி பலி

திருமண விழா கொண்டாட்டத்தில் குண்டு பாய்ந்து மணமகன் சகோதரி பலி


UPDATED : நவ 28, 2026 07:16 PM

ADDED : நவ 28, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 07:16 PM ADDED : நவ 28, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டிகர்: திருமண விழாவில், துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதில், தலையில் குண்டு பாய்ந்து மணமகனின் சகோதரி உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலம், ரேவாரியை சேர்ந்தவர், மணீஷா,30. கடந்த, 26ம் தேதி ஜஜ்ஜார் மாவட்டம், பஹதுார்கர் குபேர் காலனியில் நடந்த, தன் சகோதரனின் திருமண விழாவுக்கு, கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்தார்.

அன்று இரவு நடந்த, ‘குர்ச்சாரி’ என்ற சடங்கின் போது, மணீஷா தன் உறவினர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். அப்போது, மணமகனின் நண்பரான ஜஜ்ஜாரை சேர்ந்த தீபக் என்பவர், கொண்டாட்ட உற்சாகத்தில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். அப்போது, தவறுதலாக ஒரு குண்டு மணீஷா தலையில் பாய்ந்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மணீஷா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், மணீஷா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், மணீஷா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தீபக்கை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது. இந்த

சம்பவத்தால் திருமண விழா ரத்து செய்யப்பட்டது. மணமகன் வீட்டார் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us