மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வாங்க : மத்திய அரசை வலியுறுத்தும் கங்கனா
மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வாங்க : மத்திய அரசை வலியுறுத்தும் கங்கனா
ADDED : செப் 24, 2024 09:27 PM

மாண்டி: திரும்ப பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும். அதனை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில்,கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தன.
இதற்கு ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் ஒரு ஆண்டுகளுக்கு மேல் தொடர் போராட்டம் நடத்தியதால், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது சட்டங்களின் நன்மைகளை, விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியாமல் போனது என பிரமதர் மோடி வருத்தம் அளிக்கிறது.
இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் மாண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.யும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ராணாவத் செய்தியாளர்களிடம் கூறியது,
நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருப்பது விவசாயிகளே, அவர்களுக்கு நன்மை பயக்கும் நோக்குடன் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு திரும்ப பெறப்பட்டது.
இதனை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும். மீண்டும் கொண்டு வர விவசாயிகள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். உங்களின் நலனுக்காக தான் விவசாயிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கங்கனா ரணாவத்தின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., கட்சியினர், அப்படி ஒரு போதும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வர விடமாட்டோம். கங்கனா நினைப்பது நடக்காது என்றனர்.