தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ போர் விமானத்தை கழற்றி எடுத்துச்செல்ல பிரிட்டன் முடிவு

போர் விமானத்தை கழற்றி எடுத்துச்செல்ல பிரிட்டன் முடிவு

போர் விமானத்தை கழற்றி எடுத்துச்செல்ல பிரிட்டன் முடிவு


ADDED : ஜூலை 04, 2025 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: எரிபொருள் பற்றாக்குறையால் கேரளாவின் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் பழுதானதால், அதை கழற்றி எடுத்துச் செல்ல பிரிட்டன் விமானப் படை முடிவு செய்து உள்ளது.

வளைகுடா பிராந்தியத்தின் அமைதியின்மை மற்றும் கடற்கொள்ளையர் கண்காணிப்புக்காக, பிரிட்டன் போர்க்கப்பல் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டன. அதில் இருந்து கடற்படையைச் சேர்ந்த 'எப் - 35பி' போர் விமானம் ஜூன் 14 அன்று எரிபொருள் பற்றாக்குறையால், கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து அனுமதி பெற்றனர். பாதுகாப்பு சரிபார்ப்புகள் முடிந்த பின், விமானம் மீண்டும் ரோந்து கப்பலை அடைய அனுமதிக்கப்பட்டது. அப்போது ஹைட்ராலிக் பழுதானது தெரிந்தது.

அதை சரி செய்ய மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட ஒரு சிறிய ராயல் கடற்படை குழு திருவனந்தபுரம் வந்தது.

ஆனால், கடினமான சிக்கல் காரணமாக விமானத்தை சரி செய்யும் முயற்சி தோல்வியடைந்தது.

இந்த போர் விமானம் ஒன்றின் விலை, 920 கோடி ரூபாய். எனவே, அதை பகுதியளவு பத்திரமாக கழற்றி, பிரிட்டன் எடுத்துச் செல்ல முடிவு செய்தது. அதற்கான குழு மற்றும் விமானம் நாளை திருவனந்தபுரம் வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us