உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 14, 2026 03:47 PM
ADDED : அக் 14, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: பணத்தகராறில் தம்பி மகனை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு டில்லி, கராவல் நகர், ஷஹீத் பகத்சிங் காலனியில் வசிப்பவர், ஹரீஷ் குமார் சர்மா,45. இவரது தம்பியுடன் பணத்தகராறு இருந்தது.
இந்நிலையில், 7ம் தேதி இரவு, தன் தம்பி மகன் ஹிமான்ஷூவை வாளால் ஹரீஷ் குமார் சரமாரியாக தாக்கினார். ரத்தவெள்ளத்தில் சரிந்த ஹிமான்ஷூ ஜெ.பி.சி., மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹிமான்ஷூ ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, கொலை வழக்கு பதிவு செய்த கராவல் நகர் போலீசார், ஹரீஷ் குமாரை கைது செய்து வாள், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.
