ADDED : டிச 23, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: பெலகாவி முரகோடா அருகே யரகட்டி கிராமத்தில் வசிப்பவர் அர்ஜுன், 60. இவரது மகன்கள் கோபால், 30, மாருதி, 27. இருவரும் விவசாயிகள். திருமணம் முடிந்துவிட்டது. 15 நாட்களுக்கு முன்பு, தன் சொத்துகளை பிரித்து மகன்களுக்கு அர்ஜுன் கொடுத்தார்.
சொத்தை சரியாக பிரித்து தரவில்லை என்று, சகோதரர்களுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் தினமும் சண்டையிட்டுக் கொண்டனர்.
நேற்று காலை பூதிகொப்பா கிராமத்தில் உள்ள, மனைவி வீட்டிற்குச் சென்றுவிட்டு, கோபால் பைக்கில் யரகட்டி வந்து கொண்டு இருந்தார். அந்த வழியாக டிராக்டரை ஓட்டி வந்த மாருதி, கோபாலிடம் தகராறு செய்தார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கினர்.
கோபம் அடைந்த மாருதி, கோபால் மீது டிராக்டரை கொண்டு ஏற்றினார். உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். டிராக்டரை நிறுத்திவிட்டு மாருதி தப்பினார்.

