
 பெங்களூரின் வயாலிகாவலில் வசித்த வந்த மஹாலட்சுமி, 29 என்பவர், காதல் விவகாரத்தில் கொலை. கழுத்தை நெரித்து கொன்று, உடலை 50 துண்டாக வெட்டி பிரிஜ்ஜில் வைத்துவிட்டு தப்பிய காதலன், முக்தி ரஞ்சய் ராய் ஒடிசாவில் தற்கொலை. இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. கன்னட நடிகர் தர்ஷனின் தோழி பவித்ராவுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பிய வழக்கில், கடந்த ஜூன் 8ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, இந்த கொலையில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தர்ஷன், பவித்ராவுக்கு சமீபத்தில் ஜாமின் கிடைத்தது.
 பெங்களூரு கோரமங்களாவில் தங்கும் விடுதியில் வசித்த, பீஹாரின் கிருத்தி குமாரி, 25 என்ற இளம்பெண் கொலை. அவரது முன்னாள் காதலன் அபிஷேக் கைது.
 பெங்களூரு ராமமூர்த்திநகரில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியதால், சிட் பண்ட் ஊழியர் ஸ்ரீநாத், 34 என்பவரை, கொலை செய்து உடலை 30 துண்டுகளாக வெட்டிய கொடூரம். வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் மாதவராவ் கைது.
 தார்வாட் ஹூப்பள்ளியில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி, கல்லுாரி வளாகத்தில் புகுந்து நேகா ஹிரேமத், 23 என்ற மாணவி கத்தியால் குத்தி கொலை. முன்னாள் காதலன் பயாஸ், 24 கைது. வழக்கை விசாரித்த சி.ஐ.டி., 480 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 தார்வாட் ஹூப்பள்ளியில் கடந்த மே 16ம் தேதி காதல் விவகாரத்தில் வீடு புகுந்து அஞ்சலி, 19 என்ற இளம்பெண் கொலை. கிரிஷ் சாவந்த், 22 கைது.
 கணவர் மீதான கோபத்தில் 4 வயது மகனை, கோவாவில் உள்ள ஹோட்டலில் வைத்து கொன்று, உடலை சூட்கேசில் வாடகை காரில் பெங்களூரு எடுத்து வந்த, சுஜானா சேத், 39 என்ற பெண், மார்ச் 5 ம் தேதி கைது.
கான்ட்ராக்டர் தற்கொலை
பீதர் பால்கி கட்டிங்காவ் கிராமத்தின் சச்சின் மோனப்பா பஞ்சால், 26. கான்ட்ராக்டரான இவர் கடந்த 26ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இந்த வழக்கில் அமைச்சர் பிரியங்க் கார்கேயின் தீவிர ஆதரவாளர், ராஜு கப்பனுார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவானது. அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.

