ஏழு வயது சிறுவன் நரபலி : பி.எஸ்.எப்., வீரர்கள் கைது
ஏழு வயது சிறுவன் நரபலி : பி.எஸ்.எப்., வீரர்கள் கைது
ADDED : அக் 08, 2011 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷில்லாங்: மேகாலயாவில், மேற்கு காரோ மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற, ஏழு வயது சிறுவனை, கடந்த மூன்று நாட்களாக காணவில்லை.
இது தொடர்பாக, சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் செய்திருந்தனர். டுரா என்ற இடத்தில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை அலுவலகம் அருகே, நேற்று அந்த சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலில் சில இடங்களில், துளையிடப்பட்டதற்கான காயங்கள், அடையாளங்கள் இருந்தன. இதையடுத்து, அந்த சிறுவன் பலியிடப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக, எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சந்திரவான், பாபு கான் ஆகியோரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

