தவறுதலாக எல்லை தாண்டிய பிஎஸ்எப் வீரர்: பாக்., சிறைபிடிப்பு
தவறுதலாக எல்லை தாண்டிய பிஎஸ்எப் வீரர்: பாக்., சிறைபிடிப்பு
UPDATED : ஏப் 24, 2025 06:43 PM
ADDED : ஏப் 24, 2025 05:59 PM

பிரோஸ்பூர்: சர்வதேச எல்லையில் தவறுதலாக எல்லை தாண்டிய எல்லை பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து உள்ளனர்.
காஷ்மீரன் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொண்டது. அந்நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேறவம், அந்நாட்டினருக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்தும் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், பஞ்சாபின்பிரோஸ்பூரில் சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றார். இதனையடுத்து அந்த வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து சென்றனர்.
பிடிபட்டது யார்
பிஎஸ்எப் 182வது பட்டாலியனில் கான்ஸ்டபிள் ஆக பணிபுரியும் பிகே சிங் தான் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பிடிபட்டு உள்ளார். இவர் கோல்கட்டாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் விவசாயிகளுடன் உடன் சென்றதும், ஓய்வுக்காக மர நிழலில் ஒதுங்கிய போது பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை பாதுகாப்புடன் அழைத்து வர பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பிஎஸ்எப் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.