ஜன.,31ல் பார்லியில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜன.,31ல் பார்லியில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
UPDATED : ஜன 28, 2025 02:10 PM
ADDED : ஜன 28, 2025 02:07 PM

புதுடில்லி: பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.,31ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் பார்லிமென்டின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31ல் துவங்குகிறது. அன்றைய தினம் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்., 1ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியானது, பிப்ரவரி 13ம் தேதி நிறைவு பெறும். கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார். பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிப்பார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.
கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி அரசு தரப்பில் எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தப்படும்.