sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3 மடங்கு வேகத்தில் பாரதத்தின் முன்னேற்றம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் பெருமிதம்

/

3 மடங்கு வேகத்தில் பாரதத்தின் முன்னேற்றம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் பெருமிதம்

3 மடங்கு வேகத்தில் பாரதத்தின் முன்னேற்றம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் பெருமிதம்

3 மடங்கு வேகத்தில் பாரதத்தின் முன்னேற்றம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் பெருமிதம்

10


UPDATED : ஜன 31, 2025 12:11 PM

ADDED : ஜன 31, 2025 11:43 AM

Google News

UPDATED : ஜன 31, 2025 12:11 PM ADDED : ஜன 31, 2025 11:43 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டம் இன்று ( ஜன.31) காலையில் துவங்கியது. பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். முன்னதாக அவரை குதிரைப்படை வீரர்கள் புடைசூழ வரவேற்று வந்தனர். பார்லி.,க்கு வந்த ஜனாதிபதியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். 'பாரதத்தின் பொருளாதாரம், டிஜிட்டல் துறை , விவசாயம், புதிய சீர்திருத்தம் என பல்வேறு துறைகளில் வளர்ச்சி மும்மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி என்ற நோக்கில் இந்திய அரசு செயல்படுகிறது' என தெரிவித்தார்.

உரையின் துவக்கத்தில் மஹா கும்பமேளாவில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார். மறைந்த பிரதமர் மன்மோகன்சிங் மறைவு பேரிழப்பு என ஜனாதிபதி புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து ஜனாதிபதி முர்மு உரையில் அவர் பேசியதாவது :

மத்திய அரசு விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை நிதிக்காக ரூ.41 ஆயிரம் கோடி வழங்கி உள்ளோம். 70 வயதுக்கு மேற்பட்டோர் 6 கோடி பேர் ஆயுஷ்மான் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் .கோடிக்கணக்கான மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளோம். இந்த ஆட்சியில் வக்பு வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய சீர்திருத்த சட்டங்களை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத அளவிற்கு பாரதத்தின் வளர்ச்சி மும்மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்கள், பெண்களின் அதிகாரம், ஏழை மக்களின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயம்

இந்தியா டிஜிட்டல் மயம் , இ பேமென்ட் , தொழில் நுட்பத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் இளைஞர்கள் பயன் பெற்று வருகின்றனர். விண்வெளி துறையில் நாமே உருவாக்கிய செயற்கைகோள் ஏவும் திட்டம் வேகப்படுத்தப்பட்டுள்ளது.



இந்திய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சிறு வியாபாரிகளையும் அரவணைத்து வருகிறது. தொலைபேசி வாயிலாக ஆலோசனைகள் வழங்கியதன் மூலம் 30 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

அன்னை லட்சுமி ஆசீர்வதிப்பார் : பிரதமர் மோடி


முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களிடம் பேசியதாவது : இந்த பட்ஜெட் கூட்டம் பயனுள்ளதாக அமையும், மத்திய அரசு வர்க்கத்தினருக்கு நன்மை பயக்கும். நல்ல படியாக அமைய அன்னை லட்சுமியை வணங்குகிறேன். ஏழைகளுக்கு செல்வங்கள் வழங்கிட வேண்டுகிறேன். அவரது ஆசி கிட்டும் என நம்புகிறேன். 2047 ல் நாடு வல்லரசாக மாறும் வகையில் பட்ஜெட் இருக்கும். மக்களின் மேம்பாட்டுக்காக நாள்தோறும் பாடுபட்டு வருகிறோம். அனைவருக்குமான திட்டங்கள், புதிய முன்னேற்றம், முதலீடு ஆகியவற்றை கொண்டதாக இந்த பட்ஜெட் அமையும். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வழிதிட்டங்களுடன் இந்த பட்ஜெட் இருக்கும். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பதை நோக்கமாக கொண்டு பயணிக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.






      Dinamalar
      Follow us