ஜனாதிபதி உரை மீது 18 மணி நேரம் விவாதம்: பிப்., 4ல் பிரதமர் மோடி பதில்
ஜனாதிபதி உரை மீது 18 மணி நேரம் விவாதம்: பிப்., 4ல் பிரதமர் மோடி பதில்
ADDED : ஜன 29, 2026 04:30 PM

புதுடில்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 18 மணி நேரம் லோக்சபாவில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கு பிரதமர் மோடி பிப்., 4 ல் பதில் அளிக்க உள்ளார்.
ஜனாதிபதி உரையுடன் பார்லிமென்ட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இன்று, பார்லிமென்டில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், லோக்சபாவின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதி உரை மீதான விவாதம் பிப்., 2,3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 18 மணி நேரம் நடக்கும் இந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி பிப்., 4ல் பதிலளித்துப் பேச உள்ளார். 2026 - 27 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
இதன் மீதான விவாதம் பிப்.,5,9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 18 மணி நேரம் விவாதம் நடைபெற உள்ளது. பிப்.,11ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளிப்பார் என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

