வீடுகளில் பாயும் தோட்டாக்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி நிறுத்தம்
வீடுகளில் பாயும் தோட்டாக்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி நிறுத்தம்
ADDED : மார் 08, 2024 11:11 PM

பெங்களூரு: போலீஸ் பயிற்சி மையத்தில், பயிற்சியின் போது போலீஸ்காரர்கள் சுடும் தோட்டாக்கள் வீடுகளுக்குள் வருவதாக புகார் எழுந்ததால், துப்பாக்கி சுடும் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுஉள்ளது.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி அருகே அவதி கிராமத்தில், போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. அங்கு பயிற்சியில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சியின் போது போலீஸ்காரர்கள் தவறுதலாக சுடும் தோட்டாக்கள், பயிற்சி மையத்தை ஒட்டி உள்ள நீலேரி கிராமத்திற்குள் சென்று விடுகிறது.
இதில் சில தோட்டாக்கள், குடியிருப்புவாசிகளின் கார்கள், வீடுகளில் சுவர்களை துளைத்து உள்ளன.
கடந்த ஓராண்டாக இப்படி நடந்து உள்ளது. இதனால் பீதி அடைந்த நீலேரி கிராம மக்கள், இதுவரை குடியிருப்புக்குள் பாய்ந்த தோட்டாக்களை கையில் வைத்து, நேற்று போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அறிந்ததும் பெங்களூரு ரூரல் எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி, நீலேரி கிராமத்திற்கு சென்று, மக்களிடம் விசாரித்தார். அதன்பின், துப்பாக்கி சுடும் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

