தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பும்ரா அபாரம்: 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

பும்ரா அபாரம்: 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

பும்ரா அபாரம்: 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து


ADDED : பிப் 03, 2024 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 04:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசாகப்பட்டனம்: விசாகப்பட்டனம் டெஸ்டில் இந்திய வீரர் பும்ரா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட் சாய்க்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது.முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 336 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (179), அஷ்வின் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரட்டை சதம்

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. அஷ்வின் 20 ரன்னில் அவுட்டானார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஜெய்ஸ்வால், டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர் 209 ரன் எடுத்து அவுட்டானார். பும்ரா (6), முகேஷ் குமார் (0) விரைவில் அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சோயப் பஷிர், ஆண்டர்சன், ரேஹன் அகமது தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் (21), கிராலே (76) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. போப் 23 ரன் எடுக்க, அனுபவ ஜோ ரூட் 5, பேர்ஸ்டோவ் 25 ரன்னில் அவுட்டாகினர். ஸ்டோக்சை (47) போல்டாக்கிய பும்ரா, டெஸ்ட் அரங்கில் 150வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். ஹார்ட்லேவையும் (21), ஆண்டர்சன் (6) பும்ரா அவுட்டாக்கினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 253 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. பும்ரா 6, குல்தீப் யாதவ் 3 விக்கெட் எடுத்தனர். இங்கிலாந்து அணி 143 ரன்கள் பின் தங்கி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us