ADDED : நவ 14, 2024 05:40 AM

பெங்களூரு: பெங்களூரு மின்சார விநியோக நிறுவனமான, 'பெஸ்காம்' மற்றும் பி.எஸ்.என்.எல்., இணைய சேவைக்காக, பெங்களூரில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு கேபிள்கள் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வசந்த் நகரில் உள்ள மில்லர்ஸ் சாலையில், இணையதள சேவைக்காக கேபிள்கள் புதைக்கும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அம்பேத்கர் பவனிலிருந்து, மில்லர்ஸ் சாலை வரை இப்பணி நடைபெறுகிறது. பணியின் போது, சாலை தோண்டப்பட்டு கேபிள்கள் புதைக்கப்படுகிறது.
சில பகுதிகளில் பணிகள் முடிவடைந்த பின்னும், சரியாக சாலை சீரமைக்கப்படவில்லை. ஆங்காங்கே சாலைகளில் பள்ளங்கள் உள்ளன. மாலை நேரங்களில் புழுதி பறக்கிறது.
இதனால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும், நடைபாதைகளில் பள்ளங்கள், கற்கள் குவிந்து கிடக்கின்றன. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெங்களூரு, கன்டோன்மென்ட் ரயில் நிலையம் விரிவுபடுத்துவதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. அப்பணிகள் முடிந்த பின், மூன்று மாதங்கள் கழித்தே சாலைகள் சரி செய்யப்பட்டன.
ஆனால், தற்போது கேபிள்கள் புதைப்பதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், சாலைகள் சரிவர புதுப்பிக்கப்படாததால் மில்லர்ஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதானல் வாகன ஓட்டிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எப்போது மில்லர்ஸ் சாலை சீரமைக்கப்படும் என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
13.11.2024/A.hariharan
JPM_0854
மில்லர்ஸ் சாலையில் கேபிள்கள் புதைக்கப்படும் பணிகளால், தோண்டப்பட்ட பள்ளங்களின் மீது வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்
JPM_0855
மில்லர்ஸ் சாலை, சேதமான நிலையில் காட்சியளிக்கும் வாகனங்கள் நிறுத்துமிடம்
JPM_0857
மில்லர்ஸ் சாலை, சாலைகளில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
JPM_0860
மாலை நேரத்தில், சாலையில் புழுதிகள் எழுவதால், தண்ணீர் ஊற்றும் ஓட்டல் ஊழியர்
JPM_0868
பள்ளங்களாக இருக்கும் நடைபாதைகளால், பொது மக்கள் அவதி
JPM_0873
மில்லர்ஸ் சாலை வளைவில் சரிசெய்யப்படாத சாலை, எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரிடும் அபாயம்