குஜராத்தில் அசுர வேகத்தில் லாரி மீது மோதிய தனியார் பஸ்! 6 பேர் பலி
குஜராத்தில் அசுர வேகத்தில் லாரி மீது மோதிய தனியார் பஸ்! 6 பேர் பலி
ADDED : டிச 17, 2024 12:25 PM

ஆமதாபாத்; குஜராத்தில் அசுர வேகத்தில் சென்ற பஸ், லாரி மீது மோதியதில் 6 பேர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பாவ்நகரில் இருந்து மஹூவா நோக்கி தனியார் பஸ் ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ட்ரபாஜ் என்ற கிராமம் அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
மோதிய வேகத்தில் பஸ் முற்றிலும் சேதம் அடைந்தது. அசுர வேகத்தில் பஸ் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

