தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சபரிமலை தரிசன முன்பதிவுடன் பஸ் டிக்கெட் ரிசர்வேஷன்

சபரிமலை தரிசன முன்பதிவுடன் பஸ் டிக்கெட் ரிசர்வேஷன்

சபரிமலை தரிசன முன்பதிவுடன் பஸ் டிக்கெட் ரிசர்வேஷன்


ADDED : நவ 08, 2024 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சபரிமலை: ''சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பம்பைக்கான பஸ் டிக்கெட்டையும் முன்பதிவு செய்யலாம்,'' என கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறினார்.

சபரிமலையில் மண்டல காலம் நவ., 16-ல் தொடங்குகிறது. இதற்காக நவ., 15 மாலை நடை திறக்கப்படுகிறது. பத்தினம்திட்டையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அதன் தலைவர் பிரஷாந்த் கூறியதாவது:

ஸ்பாட் புக்கிங் செய்ய வசதியாக சத்திரம் - வண்டிப்பெரியாறு, எருமேலி, பம்பை ஆகிய மூன்று இடங்களில் கவுன்டர்கள் திறக்கப்படும். சீசனில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரீமியம் இல்லாமல், 5 லட்சம் ரூபாய் காப்பீடு வசதிக்கு தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பம்பைக்கு வந்து செல்வதற்கான பஸ் டிக்கெட்டையும் முன்பதிவு செய்யலாம் என கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் கூறினார்.

அதுபோல, 40 பேர் கொண்ட குழுக்கள் பத்து நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்தால், அவர்களுக்காக தனி பஸ் இயக்கப்படும். நிலக்கல் பம்பைக்கு இடையே அரை நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும் என்றும், 220 பஸ்கள் இதற்காக கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மண்டல பூஜை: 60 சிறப்பு பஸ்கள்

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜையை ஒட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் 15ம் தேதி முதல், ஜனவரி, 16 வரை, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்தும், திருச்சி, மதுரை, கடலுார் மற்றும் புதுச்சேரியில் இருந்தும், கேரள மாநிலம் பம்பைக்கு, அதிநவீன சொகுசு, 'ஏசி' மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில், பஸ் வசதி செய்து தரப்படும்.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிச., 27 முதல் 30 மாலை 5:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால், டிச., 26 முதல் 29ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது. எனவே பக்தர்கள், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் 'டிஎன்எஸ்டி' செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 94450 14452, 94450 14424, 94450 14463 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us