மும்பையில் தொழிலதிபர் டிஜிட்டல் கைது: ரூ.53 லட்சம் மோசடி
மும்பையில் தொழிலதிபர் டிஜிட்டல் கைது: ரூ.53 லட்சம் மோசடி
ADDED : நவ 11, 2025 04:16 PM

மும்பை: மும்பை தொழிலதிபர் இரவு முழுவதும் 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டு, ரூ.53 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
'டிஜிட்டல் கைது' தற்போது வளர்ந்து வரும் சைபர் குற்றமாகும், இதில் மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் என்று காட்டிக் கொண்டு ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து பணம் செலுத்த அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இந்த நிலையில் மும்பை தொழிலதிபரை டிஜிட்டல் கைது செய்து ரூ.53 லட்சம் மோசடியாளர்கள் மோசடி செய்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையை சேர்ந்த 60 வயது தொழிலதிபர், இவருக்கு போலியான சட்ட அமலாக்க நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் என்று கூறி, போனில் அழைப்பு வந்தது. அதை நம்பி பேசிய தொழிலதிபரிடம் உங்கள் மீது பண மோசடி வழக்கு உள்ளது. உங்கள் மீது விசாரணை உள்ளது. ஆகையால் நீங்கள் இரவு முழுவதும் வீடியோ அழைப்பில் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். மேலும் உங்களுக்கு அடுத்த நாள் கோர்ட்டில் ஆன்லைன் ஜாமின் விசாரணை இருக்கிறது என்று சுப்ரீம்கோர்ட்டிலிருந்து போலியாக அறிவிப்பும் அனுப்பப்பட்டது.
பயந்துபோன தொழிலதிபர் இரவு முழுவதும் டிஜிட்டல் கைது செய்யப்பட்டார். மேலும் தங்களின் வங்கி கணக்கு விபரங்களை அளித்து பணத்தை கொடுத்துள்ளனர். பின்னர் தாமதாமாக நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

