விபத்தில் தொழிலதிபர் பலி; வெளியே விழுந்து துடித்த இதயம்
விபத்தில் தொழிலதிபர் பலி; வெளியே விழுந்து துடித்த இதயம்
ADDED : மார் 19, 2025 09:12 PM
ராய்ச்சூர்; பைக் மீது லாரி மோதிய விபத்தில் பலியான கிரானைட் தொழிலதிபரின் இதயம் வெளியே விழுந்து துடிதுடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் சுரேஷ், 35. ராய்ச்சூரின் சக்தி நகரில் வசிக்கும் இவர், கிரானைட் தொழில் செய்து வருகிறார். தன் மகன் ஷுபம் உடன் மந்த்ராலயாவுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
ராய்ச்சூரின் மத்திய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு இணைப்பு ஏற்படுத்தும் ஸ்டேஷன் சாலையில் செல்லும் போது, வேகமாக வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.
லாரிய மோதிய வேகத்தில், சுரேஷின் உடல் சிதைந்து பலியானார். அவரது உறுப்புகள் சாலையில் சிதறின. அவரது இதயம், வெளியே வந்தும் துடிதுடித்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவரது மகன் ஷுபம், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தமிழகத்தை சேர்ந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ராய்ச்சூர் நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.