ADDED : மார் 19, 2025 06:20 PM
லஹோரி கேட்: வடக்கு டில்லியின் லஹோரி கேட்டில் துப்பாக்கி முனையில் தொழிலதிபரிடம் 80 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
வடக்கு டில்லியின் சாந்தினி சவுக்கில் உள்ள ஹவேலி ஹைதர் குலியில் செவ்வாய்க்கிழமை பணத்துடன் வந்த தொழிலதிபரை அடையாளம் தெரியாத ஒரு நபர், துப்பாக்கி முனையில் மிரட்டி, பணம் நிரப்பப்பட்ட பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பணப்பையில் 80 லட்ச ரூபாய் இருந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியை பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என, போலீசார் தெரிவித்தனர்.