தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ குழந்தைகளை கவரும் பட்டாம்பூச்சி பூங்கா

குழந்தைகளை கவரும் பட்டாம்பூச்சி பூங்கா

குழந்தைகளை கவரும் பட்டாம்பூச்சி பூங்கா


ADDED : டிச 26, 2024 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு. இனி பத்து நாளுக்கு லீவு. எதுவும் படிக்காம ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு, குழந்தைகள் கனவுல இருப்பாங்க. நிறைய இடத்துக்கு போய் நேரத்த போக்கலாம்னு நினைப்பாங்க. பெற்றோரிடம் என்னை எங்கேயாவது கூப்பிட்டு போங்கன்னு சொல்வாங்க.

இந்த பத்து நாளும் குழந்தைகளுக்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். பட்டாம்பூச்சி போல பறக்க நினைக்குற வயசுல இருக்குற குழந்தைகளை, பெற்றோர்கள் பட்டாம்பூச்சி பூங்காவுக்கே கூப்பிட்டு போகலாமே...

பெங்களூருல ஐ.டி., மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம் இருக்குற இடத்துல மான்யதா டெக் பார்க்கும் ஒன்று. இங்கே பட்டாம்பூச்சி பூங்காவும் இருக்கு.

பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், பூச்செடிகள் உள்ளன. இதை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.

பட்டாம்பூச்சிகளை பார்த்து குழந்தைகள் பரவசம் அடைந்து விடுவர்.

பட்டாம்பூச்சி மாதிரி வடிவமைப்பு செய்திருக்கும் சிலைகள் முன்பு நின்று, 'செல்பி' எடுத்து மகிழலாம். பூங்கா குளுகுளுன்னு இருப்பதாலும், பச்சை பசேலன காட்சி அளிப்பதும் மனதிற்கு அமைதி தரும்.

அங்கிருந்து திரும்பி வரவே குழந்தைகளுக்கு மனசு இருக்காது. பெரியவங்களும் அங்கு போனால் குழந்தைகள் போல மாறி விடுவர்.

கண்முன் பறக்கும் பட்டாம்பூச்சியை ஆர்வத்துடன் பார்ப்பர். குடும்பத்தோட ஒரு நாள் செலவு செய்ய ஏற்ற இடமாக, இந்த பூங்கா இருக்குன்னு இங்கு வருவோர் சொல்கின்றனர்.

பூங்கா தினமும் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்து இருக்கும்.

மெஜஸ்டிக் பஸ் நிலையத்துல இருந்து 415 இ, 415 எச், 500 ஒய், 291 எல், 502 எல், 278 ஏ, 290 ஒய், 301 ஆர் ஆகிய பி.எம்.டி.சி., பஸ்களில் சென்று மான்யதா டெக் பார்க்கில் இறங்கி கொள்ளலாம்.

மெட்ரோ ரயிலில் சென்றால் பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4.5 கி.மீ., ஆட்டோ அல்லது வாடகை காரில் பயணித்து செல்ல வேண்டும்.

செல்வது

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us