டிராவில் முடிந்ததால் 2 அணிகளும் கவலை சி.புட்டய்யா நினைவு கால்பந்து கோப்பை
டிராவில் முடிந்ததால் 2 அணிகளும் கவலை சி.புட்டய்யா நினைவு கால்பந்து கோப்பை
ADDED : செப் 27, 2024 08:02 AM

பெங்களூரு: சி.புட்டய்யா நினைவு கால்பந்து கோப்பை லீக் போட்டியில் விளையாடிய, பெங்களூரு யுனைடெட் அணியும், பெங்களூரு இன்டிபென்டென்ட் எப்.சி., அணியும் கோல் அடிக்காமல் டிராவில் முடிந்ததால், வீரர்கள் கவலை அடைந்தனர்.
பெங்களூரு அசோக்நகரில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்கு, சி.புட்டய்யா நினைவு கால்பந்து போட்டிகள் ஒரு வாரமாக நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில், டி பிரிவின் பெங்களூரு யுனைடெட் அணியும், பெங்களூரு இன்டிபென்டென்ட் எப்.சி., அணியும் மோதின.
ஆரம்பம் முதலே, இரண்டு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இதனால், முதல் பாதியில் இரண்டு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதுபோன்று, இரண்டாம் பாதியிலும் இரு அணி வீரர்களும் ஒருவரை, ஒருவர் மிஞ்சும் அளவுக்கு சிறப்பாக விளையாடினார்.
கோல் அடிக்க முடியாமல், இரு அணி வீரர்களும் எதிரணியினருக்கு டிமிக்கி கொடுத்தனர்.
எவ்வளவு முயற்சித்தும், இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை.
கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை இரு அணிகளும் தவற விட்டன. இதனால், போட்டி டிராவில் முடிந்தது.
இதற்கிடையில், பெங்களூரு யுனைடெட் எப்.சி., அணிக்கு எதிராக, பெங்களூரு எப்.சி., அணி நாளை மோதுகிறது.
இதற்காக, 32 வீரர்கள் கொண்ட வீரர்கள் பட்டியலை, பெங்களூரு எப்.சி., அணி அறிவித்துள்ளது. அவர்கள் விபரம் வருமாறு:
சுபம் மலிக், ஷாஹில் பூனியா, பிருத்விராஜ் தாஸ், சையத் கோயா தங்கல் பி.எஸ்., நங்பாம் சூரஜ்குமார் சிங், பெலக்சன் கோனி பெர்னாண்டஸ், ஹர்ஷ் பாலாண்டே, தொக்சோம் மலேமங்கம்பா சிங், ஆசிக் அதிகாரி, கிளாரன்ஸ் சாவியோ பெர்னாண்டஸ்.
திவிஜ் சுப்ரனேனி, சிவல்தோ சிங், மானவ் கவுடா, சோயப் உத்ரேஜா, ஸ்ரேயஜ் மஞ்சோஜி, ரசீத், ஓனம் ரோனெக்ஸ் மைடெயி, தாரேம் கெல்வின் சிங், சாப்மயம் ரோஹன் சிங், ஜோசுவா டிசில்வா, சாஸ்வத் பன்வார், பிராந்திக் சஹா, சாரங் சீனிவாசன் சாரி, ரோஹித் தானு, மொனிருல் மொள்ளா, நீ ஹாங் சுப்பா. தலைமை பயிற்சியாளர் பிபியானோ பெர்னாண்டஸ்.

