ADDED : டிச 15, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேக் வெட்டி போராட்டம்
பெங்களூரு மஹாதேவபுரா பனத்துார் எஸ் கிராஸ் பகுதியில், குறுகலான ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. தினமும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், காலை நேரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னையை சரிசெய்ய, பல ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிருப்தி அடைந்த குடியிருப்புவாசிகள் மாநகராட்சியை கண்டித்து, 'கேக் வெட்டி' நுாதன போராட்டம் நடத்தினர்.

