ADDED : ஜன 18, 2024 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லிலோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு பொது மக்களின் கருத்தை அறிய, புதிய இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை காங்கிரஸ் நேற்று அறிமுகப்படுத்தியது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
'இண்டியா' கூட்டணி கட்சிகளுடன் ஒருபுறம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளிலும் இறங்கிஉள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு, மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க புதிய இணையதளத்தையும், மின்னஞ்சல் முகவரியையும் நேற்று அறிமுகப்படுத்தியது.