
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ள பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் இரு கரம் கூப்பி கேட்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை வழங்கி உதவுங்கள். எங்களால் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை.
ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வர், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
பா.ஜ.,வை விசாரியுங்கள்!
வழக்குகளில் சிக்கியுள்ள எதிர்க்கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்த்து, துாய்மைப்படுத்தும் சலவை இயந்திரமாக பா.ஜ., உள்ளது. மஹாராஷ்டிரா பா.ஜ., இதில் கைதேர்ந்ததாக உள்ளது. அஜித் பவார் குறித்த ஊழல் கோப்பினை அவரிடமே அப்போதைய முதல்வர் பட்னவிஸ் காட்டியுள்ளார். இதில் விசாரணை தேவை.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்
இருளை விரட்டியுள்ளோம்!
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சியானது மோசமான நிலையில் இருந்து, மிக மோசமான நிலைக்கு திரும்பியுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தெலுங்கானாவில் கடந்த 11 மாத காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் நிலவிய இருளை போக்கியுள்ளது. ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்