நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி பிரசாரம்: பிரதமர் அறிவுரை
நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி பிரசாரம்: பிரதமர் அறிவுரை
ADDED : பிப் 17, 2024 04:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ‛‛ நாட்டின் வளர்ச்சி, ஏழைகளின் நலனை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்'', என பா.ஜ., தேசியக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக பாஜ., தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்தே நிருபர்களிடம் கூறும்போது, ‛‛ இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,370 இடங்களிலும் தே.ஜ., கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெறும். 370 என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல.
அது ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அளிக்கும் மரியாதை. வளர்ச்சி, ஏழைகளின் நலன், உலகளவில் நாட்டிற்கு கிடைத்த பெருமை ஆகியவற்றை மையப்படுத்தி பா.ஜ.,வின் பிரசாரம் இருக்க வேண்டும். இந்த விஷயங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றார்''. இவ்வாறு வினோத் தாவ்தே கூறினார்.