3வது முறை பா.ஜ., ஆட்சி இந்த நாடு முடிவு செய்து விட்டது : பிரதமர் மோடி
3வது முறை பா.ஜ., ஆட்சி இந்த நாடு முடிவு செய்து விட்டது : பிரதமர் மோடி
UPDATED : மே 26, 2024 02:43 PM
ADDED : மே 26, 2024 12:49 PM

லக்னோ: 3வது முறை பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியை அரியணையில் அமர்த்த இந்த நாடு முடிவு செய்து விட்டது என பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: உத்தரபிரதேச மக்கள் அரசியலை புரிந்து கொண்டுள்ளனர். வீழ்ச்சியடைந்து வரும் கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். இண்டியா கூட்டணியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு யார் ஓட்டளிப்பார்கள்?. அவர்கள் வகுப்புவாத மற்றும் மதவாத அரசியலில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இண்டியா கூட்டணியினர் கூறுகிறார்கள். அவர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா?.
அரசியலமைப்பு சட்டம்
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த இந்த நாடு முடிவு செய்து விட்டது. எங்களின் கொள்கைகளும், நல்ல எண்ணத்திற்கும் மக்கள் ஆதரவு அளிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க, சமாஜ்வாதி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற இண்டியா கூட்டணி முடிவு செய்துள்ளது. ஆறு கட்ட லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு வங்கி அரசியல் செய்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக நான் பாடுபட்டு வருகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.