ADDED : நவ 15, 2024 11:10 PM

ஞாயிற்று கிழமை என்றால், பலருக்கும் அசைவம் சாப்பிட பிடிக்கும். அசைவ உணவு தயாரிக்க, சோம்பலாக இருக்கும். இதே காரணத்தால் பலரும் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவர். ஆனால் குறுகிய நேரத்தில், 'படாபட் சோம்பேறி சிக்கன்' செய்து சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள்
l சிக்கன் - அரை கிலோ
l வெங்காயம் - இரண்டு அல்லது மூன்று
l இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
l மல்லி தழை - ஒரு கைப்பிடி
l மிளகாய் துாள் - ஒரு ஸ்பூன்
l தனியா துாள் - ஒரு ஸ்பூன்
l கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
l மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
l கஸ்துாரி மேத்தி - கால் ஸ்பூன்
l எண்ணெய் - 3 ஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். சிறிதாக வெட்டி வைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, கொத்துமல்லி தழை, மிளகாய் துாள், தனியா துாள், கரம் மசாலா, கஸ்துாரி மேத்தி, உப்பு, மஞ்சள் துாள் போடவும்.
இந்த கலவையில் மூன்று ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பின் இதை அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
இதை அடுப்பில் வைத்து, 20 முதல் 25 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடி பிடிக்காமல் அவ்வப்போது கிளறி விட வேண்டும். சிறிது நேரத்தில் 'படாபட் சோம்பேறி சிக்கன்' ரெடி. செய்வது மிகவும் எளிது. குறிப்பாக திருமணமாகாமல், தனியாக தங்கி இருக்கும் இளைஞர்கள், இதை விரைவில் செய்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

