sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிப்.26ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி

/

பிப்.26ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி

பிப்.26ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி

பிப்.26ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி

4


UPDATED : பிப் 24, 2026 04:05 PM

ADDED : பிப் 24, 2026 08:04 AM

Google News

4

UPDATED : பிப் 24, 2026 04:05 PM ADDED : பிப் 24, 2026 08:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்.26ம் தேதி இந்தியா வருகிறார். இது அவரது முதல் இந்திய பயணமாகும்.

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி பிப்.26 முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். டில்லி வரும் அவர், பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, பொருளாதாரம், எரிசக்தி, யுரேனியம் வினியோகம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து அவர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. கனடா பிரதமர் மார்க் கார்னி பயணத்தை அந்நாடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இருநாடுகளின் தலைவர்களும் கவனம் செலுத்துவார்கள் என்று கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம், பிரதமர் மார்க் கார்னி தொழிலதிபர்களையும் சந்திக்கிறார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்த போது காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் மீது குற்றம்சாட்டி இருந்தார். அதன் காரணமாக இரு நாடுகளின் உறவில் சிக்கல் ஏற்பட்டது. புதிய பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கார்னி, இரு நாட்டு உறவில் ஏற்பட்ட சிக்கல்களை சீர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us