கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு: பட்டதாரிகள் 3 ஆயிரம் பேருக்கு சூப்பர் சான்ஸ்!
கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு: பட்டதாரிகள் 3 ஆயிரம் பேருக்கு சூப்பர் சான்ஸ்!
UPDATED : செப் 19, 2024 07:21 PM
ADDED : செப் 19, 2024 06:54 AM

புதுடில்லி: கனரா வங்கியில் 3 ஆயிரம் அப்ரென்டிஸ் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4.
கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 3 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 100 காலியிடங்களும், கர்நாடகாவில் 600 காலியிடங்களும், கேரளாவில் 200 காலியிடங்களும், தமிழகத்தில் 350 காலியிடங்களும், தெலுங்கானாவில் 120 காலி இடங்களும் உள்ளன.
கல்வி தகுதி என்ன?
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும், PWBD பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://nats.education.gov.in/ என்ற அப்ரென்டிஸ்ஷிப் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், https://canarabank.com/என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. SC/ST/PwBD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4.