ADDED : ஜூலை 26, 2024 12:10 AM

முக்கியத்துவம் வாய்ந்த நீட் தேர்வை மத்திய அரசு முறையாக நடத்த தவறி விட்டது. தற்போது இந்த பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்நிலையில், பல மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய முறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
அற்ப அரசியல் செய்கிறது!
நீட் தேர்வில் அமைப்பு ரீதியான விதிமீறல் எதுவும் இல்லை என சுப்ரீம் கோர்ட் தெளிவாக கூறியுள்ளது. காங்கிரசுக்கு மத்திய அரசு மீது தான் நம்பிக்கை இல்லை. உச்ச நீதிமன்றத்தின் மீதுமா நம்பிக்கை இல்லை. நீட் தேர்வை வைத்து அற்ப அரசியல் செய்த காங்கிரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி தந்துள்ளது.
தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
பதவி விலகுங்கள் சித்தராமையா!
கர்நாடக அரசு எஸ்.சி., - எஸ்.டி., நிதியில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது; இது மிக முக்கிய பிரச்னை. முதல்வர் சித்தராமையா பதவி விலகிவிட்டு, வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.
பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர், பா.ஜ.,